நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு – சம்பிகவை தாக்கியதாக குற்றச்சாட்டு

  • December 19, 2019
  • 493
  • Aroos Samsudeen
நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு – சம்பிகவை தாக்கியதாக குற்றச்சாட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்ற வளாகத்திற்கு  அழைத்து வரும் போது இனம் தெரியாத நபர் அவரை தாக்கியதாக கூறி, முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் ஆதரவாளர்கள் சிலர் நீதிமன்ற நீதிமன்ற வளாகத்தின் முன் பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு குழப்பமான சூழ்நிலை எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சரைத் தாக்கிய நபர் நீதிமன்ற வளாகத்திற்கு பொலிஸாரால்  அழைத்துச் செல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்டதுடன் எதிர்வரும் 24ம் திகதிவரை அவரை  விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
comments