சஜித்தை பீடித்துள்ள பயம்

  • December 20, 2019
  • 333
  • Aroos Samsudeen
சஜித்தை பீடித்துள்ள பயம்
தனக்கு எதிரான சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த தேர்தல் காலத்தில் ஒவ்வொரு தீ பொறியும் பற்ற வைக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட போவதாக தெரிவித்தனர். இப்படியான பல விடயங்கள் வெளியாகின.
அதன் மூலம் கைகளையும், கால்களையும் கட்டி என்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியமையை மக்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
எனக்கு நடந்த அநீதி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடந்துவிடுமோ? என்ற பயம் எனக்குள்ளது. வாய்க்கு அருகில்வந்து அதை தருவதாகவும் இதை தருவதாகவும் கூறுவர்.
ஆகவே அனைத்து பொறுப்புகளையும் கையளித்தால் அவற்றை ஏற்றுக்கொள்ள தயார் என்பதை கூறிக்கொள்கின்றேன். அப்படியில்லாவிடின் நான் அதை பொறுப்பேற்ற மாட்டேன்.
எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கொள்ள விடமாட்டேன். அதனால் இன்று காலை முதலே எனக்கு சேறு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன´ என்றார்.
Tags :
comments