வனஜீவராசிகள் அமைச்சரின் அட்டாளைச்சேனை இணைப்பாளராக அஸீஸ் நியமனம்

  • December 25, 2019
  • 974
  • Aroos Samsudeen
வனஜீவராசிகள் அமைச்சரின் அட்டாளைச்சேனை இணைப்பாளராக அஸீஸ் நியமனம்

வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமலவீர திஸாநாயக்கவின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான இணைப்பாளராக எஸ்.எல்.ஏ.அஸீஸ் (சுது) நியமிக்கப்பட்டுள்ளார்.

2019.12.10 ஆம் திகதி முதல் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சரின் சகலவிதமான செயற்பாடுகளுக்கும் பொறுப்பானவராகவும், தனது ஏக பிரதிநிதியாகவும் செயற்படுவார் என்றும் நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.எல்.ஏ.அஸீஸ் (சுது) அக்கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒருவர் வெற்றி பெற்று அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments