ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் : துணை இராணுவ தளபதி உட்பட 6 பேர் பலி

  • January 4, 2020
  • 384
  • Aroos Samsudeen
ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் : துணை இராணுவ தளபதி உட்பட 6 பேர் பலி
ஈராக்கின் துணை இராணுவப் படைகளின் கட்டளைத் தளபதி பயணித்த வாகனத் தொடரணி மீது அமெரிக்கா குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது,
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்த்தின் வடபகுதியில் தாஜி வீதியில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஈராக் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு சம்பவத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபரின் பெயர் இன்னும் வெளிவிடப்படவில்லையெனவும் அந்நாட்டு ஊடகம் தெரவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஈராக், பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆழில்லா விமானத்தாக்குதலில் ஈரான் நாட்டின் எலைட் குட்ஸ் படையின் தளபதி ஜெனரல் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags :
comments