‘பொலிஸார் தவறான பாதையில் பயணிக்கின்றனர்’ – இராஜாங்க அமைச்சரின் பரபரப்பு டுவிட்டர் பதிவு

  • January 5, 2020
  • 195
  • Aroos Samsudeen
‘பொலிஸார் தவறான பாதையில் பயணிக்கின்றனர்’ – இராஜாங்க அமைச்சரின் பரபரப்பு டுவிட்டர் பதிவு
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் சரியான பாதையில் சென்றாலும், பொலிஸார் மற்றும் விசாரணைகள் தவறான பாதையில் பயணிப்பது கவலைக்குரிய விடயம் என, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் வலைதளத்தில் நேற்று (04) இட்டுள்ள பதிவில் இதனைக் கூறியுள்ளார்.
பொதுமக்களின் நிதியை மோசடி செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பலர், சாட்சிகளுடன் உள்ள நிலையில் அவர்கள் பின்னால்  பொலிஸாரும், சட்டமா அதிபர் திணைக்களமும் செல்லவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு தான் இணக்கம் இல்லையென்றும் அவர் தமது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Tags :
comments