டிரம்பினை கொலை செய்வதுகூட போதுமானதல்ல – ஈரான் விமானப்படை தளபதி

  • January 7, 2020
  • 324
  • Aroos Samsudeen
டிரம்பினை கொலை செய்வதுகூட போதுமானதல்ல – ஈரான் விமானப்படை தளபதி
கசேம் சொலைமானியின் கொலைக்கு டிரம்பினை கொலைசெய்வது போதுமான பழிவாங்கல் நடவடிக்கையாக அமையாது  என ஈரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவின் வான்வெளி தளபதி அமீர் அலி ஹஜிஜடேஹ் தெரிவித்துள்ளார்.
சொலைமானியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டிரம்பினை கொலை செய்வது கூட போதுமான பழிதீர்க்கும் நடவடிக்கையாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இலக்குகள் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்வதோ அல்லது படையினர் மீது தாக்குதலை மேற்கொள்வதோ டிரம்பினை கொலை செய்வதோ இந்த மாவீரனின் குருதிக்கு இணையாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை பிராந்தியத்திலிருந்து அகற்றுவதே சொலைமானியின் மரணத்திற்கான பொருத்தமான பழிதீர்க்கும் நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags :
comments