சிறிகொத்தவில் இன்று விசேட சந்திப்பு

  • January 9, 2020
  • 181
  • Aroos Samsudeen
சிறிகொத்தவில் இன்று விசேட சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிகொத்தவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பிற்பகல் 3 மணிக்கு இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் குறித்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்காக அனைவரையும் ஒரு முன்னணியாக ஒன்றிணைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக வெளியிடப்படும் தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Tags :
comments