பொலிஸார் இருவருக்கு 28 வருட சிறைத்தண்டனை

  • January 9, 2020
  • 238
  • Aroos Samsudeen
பொலிஸார் இருவருக்கு 28 வருட சிறைத்தண்டனை

10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரனால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதிகளுக்கு சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு அரலகங்வில பொலிஸில் பணி புரிந்து வந்த ​போது சட்டவிரோதமாக மான் இறைச்சியை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக 10 ஆயிரம் ரூபாவினை இலஞ்சமாக பிரதிவாதிகள் கோரியுள்ளனர்.

குறித்த பணத்தினை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஆணைக்குழுவினரால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

அதன்படி, பிரதிவாதிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்படுவதாக வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
comments