ஏ.ஆர் .மன்சூர் பவுண்டேஷன் அமைப்பினரால் வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் வேலைத்திட்டம்

  • January 11, 2020
  • 87
  • Aroos Samsudeen
ஏ.ஆர் .மன்சூர் பவுண்டேஷன் அமைப்பினரால் வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் வேலைத்திட்டம்
(எம்.என்.எம்.அப்ராஸ்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கேற்ப வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன்    அமைப்பினரால் வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் வேலைத்திட்டம் அமைப்பின் ஸ்தாபகர் சட்டத்தரணி மர்யம் நளீம்டீன் வழிகாட்டலில் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கட்டிடமொன்றின் சுவரில் சூழலை பாதிப்படைய செய்யும் விடயங்கள் மற்றும் போதைபொருள் பாவனை ஒழிப்பு தொடர்பான விழிப்பூட்டும் சுவர் ஓவியம் இன்று(09) வரையப்படுகிறது.
அம்பாறை மாவட்ட கல்முனை பகுதியில் முதன் முறையாக வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் திட்டம் இவ் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
Tags :
comments