ஐ.தே.க. யையும் உள்ளடக்கியே, புதிய கூட்டணி – சஜித் தெரிவிப்பு

  • January 20, 2020
  • 340
  • Aroos Samsudeen
ஐ.தே.க. யையும் உள்ளடக்கியே, புதிய கூட்டணி – சஜித் தெரிவிப்பு
ஐக்கிய தேசியக்கட்சியை உள்ளடக்கும் வகையில், புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தகவலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பியகமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியை தவிர்த்து கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
தம்மை பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக்கட்சியை உடைத்துவிட்டு தனிக்கட்சியை அமைக்கவேண்டிய நோக்கம் இல்லை என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிக ஆனசங்களை பெறும் நோக்கத்துடன் செயற்படுவதால் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான கூட்டணியே அமைக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
Tags :
comments