நான் நீக்கப்பட்டமை குறித்து ஆச்சரியப்பட மாட்டேன், ஆனால் கவலைப்படுகிறேன் – இம்தியாஸ்

  • January 31, 2020
  • 160
  • Aroos Samsudeen
நான் நீக்கப்பட்டமை குறித்து ஆச்சரியப்பட மாட்டேன், ஆனால் கவலைப்படுகிறேன் – இம்தியாஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கினாலும் தான் கட்சியை பாதுகாத்து, பெரும்பான்மை நிலைப்பாட்டுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க போவதாக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கோ, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியோ எதனை செய்யவில்லை எனவும் “ஆமாம் சாமி” போடும் நபராக தான் இருக்கவில்லை என்ற காரணத்திற்காக செயற்குழுவில் இருந்து நீக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தன்னிடம் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இல்லை என்பதால் பதவிகள் அவசியமில்லை எனவும் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று -30- நடைபெறுவதாக எனக்கு அழைப்பு கிடைக்கவில்லை. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்துக்கொண்டேன்.
நான் நீக்கப்பட்டமை குறித்து ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் கவலைப்படுகிறேன். கட்சியின் ஒற்றுமை, ஜனநாயகம் மற்றும் கட்சியின் வலுப்படுத்த கடந்த காலங்களில் குரல் கொடுத்தேன். எப்போதும் ஆமாம் சாமி போட்டதில்லை என தெரிவித்துள்ளார்.
Tags :
comments