ரணிலின் யோசனையை நிராகரித்த சஜித்

  • February 11, 2020
  • 172
  • Aroos Samsudeen
ரணிலின் யோசனையை நிராகரித்த சஜித்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் ரணில் ஆதரவு உறுப்பினர்களின் யோசனையை சஜித் பிரேமதாஸ நிராகரித்துவிட்டாரென அறியமுடிகின்றது.
முன்னதாக இன்று செயலாளர் நியமனத்தில் சர்ச்சை ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதும் அது சுமூகமாக முடிந்த நிலையில் யானை சின்னத்தில் போட்டியிடவேண்டுமென ரணில் ஆதரவு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் இதுவிடயத்தில் எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை.ஆனாலும் புதிய அரசியல் கூட்டணி என்பதால் புதிய சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ள சஜித் , யானை சின்னத்தை பயன்படுத்தாதிருக்க உத்தேசித்துள்ளதாக அறியமுடிந்தது. siva
Tags :
comments