பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.எல்.மர்ஜூன்

  • February 11, 2020
  • 585
  • Aroos Samsudeen
பொதுத் தேர்தலில்  போட்டியிடும் தொழிலதிபர் ஏ.எல்.மர்ஜூன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல சமூகசேவையாளர் ஏ.எல்.மர்ஜூன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று புதுப்பள்ளி வட்டாரத்தின் தலைவராகவும், அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் செயல்படும் ஏ.எல்.மர்ஜூன் எம்.ஆர்.ஏ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றுவதுடன் பிரபல தொழிலதிபராகவும் திகழ்கின்றார்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அதீத ஆர்வமும் ஊர்ப்பற்றும் கொண்ட மர்ஜூன் எந்த சந்தர்ப்பத்திலும் மக்களின் தேவைகளை அறிந்து தனது பணத்தையும், உழைப்பையும் செலவு செய்து களத்தில் நின்று பணியாற்றுகின்றவர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளரச்சிக்காக அக்கரைப்பற்றில் தனது பங்களிப்பை வழங்கி வரும் இவர் கடந்த காலத்தில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த கும்பளினால் தாக்குதலுக்கு உட்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவர்மீதான தாக்குதலை கட்சிபேதமின்றி அக்கரைப்பற்று மக்கள் கண்டித்தனர். இதற்குக் காரணம் கட்சி அரசியலுக்கப்பால் இவரின் மக்கள் பணியாகும்.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் கோட்டையாக கருதப்படும் அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதான அலுவலகத்தை திறந்து அதனை இன்றுவரை மக்கள் பணிக்காக விட்டுள்ளார்.

இவ்வாறு தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு விசுவாசமாகவும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்ட தொழிலதிபர் ஏ.எல்.மர்ஜூன் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தமது முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏ.எல்.மர்ஜூன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
comments