தேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம்

  • March 16, 2020
  • 875
  • Aroos Samsudeen
தேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இன்று காலை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியபோது நஸீருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஹக்கீம் இங்கு தெரிவித்தார்.

சஜீத் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாரை மாவட்டத்தில் 6 வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீர் கடந்த இரண்டு வருடங்களாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments