முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக் கட்சி – லொயிட்ஸ் ஆதம்லெப்பை

  • March 22, 2020
  • 241
  • Aroos Samsudeen
முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக் கட்சி – லொயிட்ஸ் ஆதம்லெப்பை

(பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு இனவாதத்தை பேசுகின்ற கட்சியாகவும், ஏனையவர்களின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துகின்ற கட்டிசியாக இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், வேட்பாளருமாகிய லொயிட்ஸ் யூ.கே.ஆதம்லெப்பை தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடயிருத்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவரை போட்டியிட விடாமல் தடுத்து நிறுத்தினார். அதேபோல் இம்முறையும் என்னை தடுத்து நிறுத்த பல சதித்திட்டங்களைத் தீட்டி தடுக்க முயற்சித்தார். ஆனால் ஹக்கீமுக்கு முடியாமல் போய்விட்டது. இது ஹக்கீமின் இனவாத செயற்பாடுகளை மிக தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு அட்டாளைச்சேனை மக்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்று அதில் வெற்றியடைந்தேன். அதன் மூலம் வாழ்வாதாரத் திட்ட உதவிகள், வீதி அபிவிருத்தித் திட்டங்கள், தொழில் வாய்ப்புக்கான ஏற்பாடுகள், நிதி உதவிகள், அரச உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றங்கள் போன்ற இன்னும் பல சேவைகளை மூவின மக்களுக்கும் சமமாகச் செய்துவருகின்றேன்.

எனது இந்த செயற்பாட்டினையும், மக்களினால் எனக்கு கிடைத்து வருகின்ற அதீத நன்மதிப்பையும், எனது உயர்ச்சியையும் கண்டு பயந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எப்படியோ என்னை முடக்கிவிடவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். அதன் ஒரு வெளிப்பாடுதான் இம்முறை நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முயன்றதாகும். அதில் அவர் தோள்வியைக் கண்டாரே தவிர வெற்றிபெறவில்லை. இதுவே எனது வெற்றியின் முதற்படியாகும்.

அதுமாத்திரமல்லாமல், அட்டாளைச்சேனை மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். இதேபோல் நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை, மகாஓயா, தெகியத்தக்கண்டி, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், பாணம, லாகுகல போன்ற பிரதேச மூவின மக்களின் ஆதரவுகள் எனக்குள்ளது என்பதையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நன்கறிவார்.

எனது வளர்ச்சியையும், உயர்ச்சியையும் அவரால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. நான் அல்லாஹ்வுக்கு அஞ்சியவனாக யாருடைய எதிர்பார்ப்புக்களையும் பாராமல் எனது அரசியல் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது. நான் இத்தேர்தலில் வெற்றிபெறுவேன் என்பதை மு.காவின் தலைவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Tags :
comments