மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி நியமனம்

  • March 24, 2020
  • 200
  • Aroos Samsudeen
மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி நியமனம்
மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அவர் (24) செவ்வாய்க்கிழமை முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
 2006 ஜூன் மாதம் 12 ஆம் திகதி விமானப் படையின் 12 ஆவது விமானப் படைத் தளபதியாகப் பதவியேற்ற ரொஷான் குணதிலக்க, 2011 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஓய்வுபெற்றார்.
வானூர்த்தி நிபுணராக நீண்ட காலம் சேவையாற்றிய ரொஷான் குணதிலக்க, இலக்கம் 03 கடல் கண்காணிப்புப் படையணி மற்றும் 04 ஆவது வானூர்த்திப் படையின் கட்டளை அதிகாரியாகவும் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார்.
விமானப் படையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், விமானப்படைத் தளபதியாகப் பதவி வகிக்கையில், விமானப் படையின் பல்வேறு துறைகளை நவீனமயப்படுத்தி வெற்றிகரமாக யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர பங்களிப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Tags :
comments