உயர் நீதிமன்றத்தை நாடுமாறு தேர்தல்கள், ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை

  • April 3, 2020
  • 241
  • Aroos Samsudeen
உயர் நீதிமன்றத்தை நாடுமாறு தேர்தல்கள், ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை
பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறியுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியலமைப்பின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பில் கருத்தைக் கோரமுடியும் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ளது.
ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போதைய நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மூன்று மாதங்களுக்கு மேல் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுமாக இருந்தால் அது அரசியலமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இந்நிலையிலேயே, உயர் நீதிமன்றத்தை நாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி கோரியுள்ளது.
Tags :
comments