கையும் மெய்யுமாக பிடிபட்ட சதுர D அல்விஸ்

  • April 5, 2020
  • 219
  • Aroos Samsudeen
கையும் மெய்யுமாக பிடிபட்ட சதுர D அல்விஸ்
மக்களுக்கு கவலையை உண்டு பண்ணி அவர்களை துன்பத்தில் ஆழ்த்தி ஆதாயம் தேடுவது எதிரிகளினதும் பத்திரிகையாளர்களினதும் வியாபார யுக்தியாகும்.நாய்கள் சண்டை பிடிப்பதும்,சச்சரவில் ஈடுபடுவதும்,யுத்தம் செய்வதும் என அனைத்தும் செய்தியாகும்.செய்திகள் இல்லாதபோது அதனை திட்டமிட்டு உருவாக்குவார்கள்.- Dorothy L. Sayers
இக்கருத்தை மெய்பிப்பதனைப்போல,சதுர டீ அல்விஸ் கையும் மெய்யுமாக பிடிபட்டது,கிரிக்கெட் விளையாட்டில் ஸ்டம்ப் செய்யப்பட்டு அவுட் ஆவதை உறுதிப்படுத்த நடுவரிடம் கேட்பதனைபோன்றும்,அதற்கு அவசியம் இல்லாமலே ஆகிவிட்டதனைப்போன்றும் இருக்கின்றது.
சதுர எண்ணியதெல்லாம் தனது மேடை முகாமைத்துவத்தினாலும் பொறியியல் விஞ்ஞானக்கல்வியினாலும் தனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவருக்கு பாரிய பணியொன்றை திட்டமிட்டு செய்கிறார் என்பதாகும்.
சதுரவின் ஆழ்மனதின் நோக்கம் ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்துடன் தொடர்புபடுத்தி தாக்கத்தை உண்டுபண்ணுவதாகும். “அத தெரண” அதற்கான அடையாளத்துடன்கூடிய செய்தி ஊடகமாகும்.சதுரவிற்கு தேவைப்பட்டது எல்லாம் அடுத்த செய்தி அறிக்கைக்கு விக்ஷேடமான ஒரு துணுக்கை பெற்றுக்கொள்வதுதான்.இது சதுரவின் வார்த்தைகள்,எனது வார்த்தைகள் அல்ல.
உள்ளூர் அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக அரங்கினுள் குசுகுசுத்தார்கள்.விளம்பர இடைவேளையின்போது நாட்டு மக்களுக்காக ஒளிபரப்பு தவிர்க்கப்பட்டிருந்தபோது அரங்கேற்றப்பட்ட இந்த இழிவான, அவமானகரமான மற்றும் அவமதிப்புக்குரிய காட்சியை யார் கமெராவிற்குள் அடக்கினார்களோ அவர்களுக்கு மிகவும் தெளிவான நன்றி.என்னால் அவர்களீண் கீழ்த்தரமான சம்பாக்ஷனையை ஜீரணிக்க முடியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை மற்றும் திறமை என்ன? மக்களுக்காகப் பேசுபவர்களும், சமூகங்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு வெளிப்படையாக உறுதியளிப்பவர்களும் இங்கே மிகவும் வெளிப்படையாக நிற்கிறார்கள்.இது முழு நிர்வாணத்தை,அவர்கள் மறைத்துக்கொண்டிருப்பதனை வெளிக்காட்டுவது அன்றி வேறென்னவாயிறுக்கும்?
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மில்லியன் கணக்கானவர்களினால் பார்க்கப்பட்ட இந்தக்காணொளி “சதுர” தெளிவாகவே அவுட் ஆகிவிட்டார் எனக்காட்டுகின்றது என்பதும் மீண்டும் அவர் நீண்ட நடை பவணி ஒன்றை போகவேண்டியும் இருக்கும் என்பதுபோல் தெரிகின்றது.
நடுவர் என்ன செய்யப்போகிறார்? அவர் சதுரவை ஆள்வாரா? சதுர பெவிலியனுக்கு நடந்து சென்று புறப்பட்டுச்செல்வாரா?
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டாக இருந்தாலும், நடுவர் கள்வனாக இருந்தால் ஒரு ஜென்டில்மேன் வெளியே செல்ல வேண்டியிருக்கும் அல்லது நடுவர் பொருட்படுத்தாமல் விட்டால் தொடர்ந்து பேட் செய்து ஆட்டமிளக்காமல் ஆடலாம். சதுர தொடர்ந்து ஆட்டமிளக்காமல் ஆடி இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்துவாரா?
தெரண தொலைக்காட்சி சேவையிடம் நாம் கேட்டுக்கொள்வது எல்லாம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையோடு விளையாடவேண்டாம் என்பதுதான்.ஊடக வணிகம் செய்பவர்கள் மிகவும் அவதானத்திற்கு உட்பட்டவர்கள்.கனடா போன்ற நாட்டில் இவ்வாறான ஊடக விதிமுறைகளை மீறும் ஊடகவியலாளர்களுக்கு பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.அதனை ஊடகவியலாளர்கள் நன்கு உணர்ந்தே நடந்துகொள்கின்றனர்.
திலித்,நீங்கள் தெரண தொலைக்காட்சி சேவை அதி ஆபத்தான நடத்தை கோலத்தை பலகாலமாக நடைமுறைப்படுத்துகின்றீர்கள்.நாட்டின் பிரஜைகளுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ளும் உன்னதமான பொறுப்புவாய்த பணி ஊடகங்களுக்கு உண்டு.இருப்பினும் தெரணவின் பண்பு இதனின்றும் வேறுபட்டது.அதனை பலகாலமாக அது பின்பற்றிவருகின்றது.
நடுவர் திலித் ஜயவீர அவர்களுக்கு நான் கூறும் முதலாவது யோசனை மேலே குறிப்பிட்ட நபர் தொடர்பில் அவதானமாக இருக்கவும் என்பதுதான்.நீங்கள் உங்களை படைத்தவனை ஏற்றுக்கொண்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவனை நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி அது எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இரண்டாவதாக, இலங்கையின் நியாயமான மக்கள்தொகையில் ஒரு பகுதியை இலக்காகக் கொண்ட தொடர் துன்புறுத்தல் மூலம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரல் அச்சுறுத்தல் அல்ல, நாங்கள் அதை நம்முடைய இறைவன் அல்லாஹ்விடம் விட்டு விடுகிறோம். அவர் எங்களின் சிறந்த விநியோகிப்பாளர்.
உங்களிடமிருந்து விளம்பரத்தின் சிறந்த கைவினைப்பொருளைக் கற்றுக்கொண்ட ஒருவராக உங்கள் அறிவு, நற்சான்றிதழ்கள் மற்றும் சாதனைகள் குறித்து மிகுந்த அக்கறை கொண்ட ஒருவராக இருந்தவரைப்பற்றி நான் பார்த்த மற்றும் கேட்டதைக் கண்டு திகைத்துப் போனேன்.இவ்வாறான விரைவான சரிவையும் தோல்வியையும் ஏற்படுத்துவதனை சரிசெய்யும் விதத்தில் பொறுப்பானவர் என்ற ரீதியில் குறைந்தது நாட்டின் நலனுக்காகவும் ஒளிபரப்புத் துறையின் விழுமியங்களை பாதுகாப்பதற்காக பின்பற்றவேண்டிய கடற்பாடுகளுக்காகவும் ஆவது இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பின் நிற்பது ஏன்?
திலித்,உங்களது நேர்காணல்கள், நுண்ணறிவு மற்றும் எச்சரிக்கையான ஆய்வின் உதவியுடன் ஒரு நேர்காணலில் சிறந்தவற்றைப் பெறவோ அல்லது பிரித்தெடுக்கவோ முடியாத தீவிரமான சியோலிசத்தால் சிக்கியுள்ள அதிக வகுப்புவாத நபர்களால் அலங்கரிக்கப்படுகின்றனர்.
ஊடகத்துறையின் முதற்கடமை உண்மையான செய்திக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகும்.செய்திகளை சேகரிப்பதும் அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்தலும் ஊடக தொழில்முறை ஒழுக்கத்துடன் துவங்கும் செயற்பாடாகும்.பின்னர் பத்திரிகையாளர்கள் மேலதிக தேடுதலுக்கு உட்பட்டு, அவற்றின் அர்த்தத்தின் நியாயமான மற்றும் நம்பகமான செய்தியை தெரிவிக்க முயற்சிக்கின்றனர்.பொறுப்பான ஊடக அமைப்பு என்றவகையில் இந்த வகையான விடாமுயற்சியை நீங்கள் பின்பற்றுகின்றீர்கள் என எங்களுக்கு நிரூபிக்க முடியுமா?
திலித், இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ எந்தவொரு நியாயமான சந்தேகத்திற்கும் அப்பால் தெரணவின் தெளிவான இரு முகங்களையும் நயவஞ்சனை அல்லது பாசாங்குத்தனத்தையும் அம்பலப்படுத்துகின்றது. இப்போது வரை மிகவும் திறமையாக இருக்கிறது. எப்போதும் பொறாமையுடன் பாதுகாக்கப்பட்ட “நிகழ்ச்சி நிரலை” நீங்கள் மிகத் தெளிவுபடுத்துகிறீர்கள். உங்கள் தொலைக்காட்சி நிலையம் சமூகத்திற்கு பாரதூரமான ஆபத்தானது, நீங்கள் உண்மையிலேயே உங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும்.
திலிப்.நீங்கள் பொறுப்பான ஊடகமொன்றின் அடிப்படைகளையும் அதன் சமூக பொறுப்புணர்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கும் மாறுபாடாக அரசியல் ரீதியான ஆபத்தான பாதையை பின்பற்றி வருகின்றீர்கள்.நான் இவற்றையெல்லாம் உங்களுக்குச்சொல்லித்தரவேண்டியதில்லை.
நாட்டின் அரசியல் வாதிகளுடன் நீங்கள் வைத்திருக்கும் மறைமுகமான புரிதல் ஒரு வெளிப்படையான ரகசியம். அது ஏன் எல்லா இலங்கையர்களுக்கும் அமைதியையும் சமாதானத்தையும் வழங்கமுடியாது?ஏன் இந்த உன்னதமான பணிக்கு நீங்கள் எதிரானவரா?
இனவாதம் நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது அது குணப்படுத்த முடியாத வியாதியாகைவிட்டது.அதன் பலனை அருவடை செய்ய பொறாமையை ஊட்டும் பாத்திரத்தை வகிக்க அத தெரண போன்ற ஊடகங்கள் உங்களுக்கு தேவை.
நான் வாழும் கனடாவில் இது நடந்தால், அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமாவை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
கனடாவின் ஒளி/ஒலி பரப்பாளர்களின் சங்கத்தின் சரத்துக்கள் 2வது பந்தி பின்வருமாறு உள்ளது.
எல்லோருக்கும் பூரணமானதும் சமமானதுமான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் உரிமை உண்டு என்பதனை உணர்ந்த ஒலிபரப்பாளர்கள் அவர்களின் நிகழ்ச்சிகளில் ஜாதி,இனம்,நிறம்,மதம் போன்ற விடயங்களில் கருத்து தெரிவிப்பதைல்லை.மேலும் வயது,பால்,திருமண அந்தஸ்து,உடல்ரீதியான அல்லது உளவியல் ரீதியான குறைபாடுகளை பகிரங்கப்படுத்துவதுமில்லை.
வெள்ளைக்காரனிடம் இருந்து எவ்வளவோ கற்கவேண்டி இருக்கின்றது.
மூலம்: NISTHAR IDROOS
https://www.colombotelegraph.com
தமிழில்:AKBAR RAFEEK
05/04/2020
Tags :
comments