இறக்காமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு

  • April 5, 2020
  • 122
  • Aroos Samsudeen
இறக்காமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு

(இறக்காமம்  செய்தியாளர் முகம்மட் நிப்றி)

“ஆலையடிவேம்பு தமிழர் மேம்பாடு பேரவையினால் இறக்காமம் பிரதேசத்தில் நிவாரணப் பொதிகள் கையளிப்பு” நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மக்களின் வாழ்வாதாரம் முற்றாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்று இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நஹிஜா முஸாபிர் அவர்களின் அனுமதியுடனும் கிராம சேவகர் திரு M.J.M.அத்திக் அவர்களின் மேற்பார்வையின் கீழும் தமிழர் மேம்பாடு பேரவையினால் இறக்காமம் (மாணிக்கமடு) பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது மாணிக்கமடு கோவில் தலைவர் திரு ஏகாம்பரம் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் உலர் உணவுப் பொருட்களை வழங்கிய ஆலையடிவேம்பு தமிழர் மேம்பாடு பேரவையினருக்கு இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நஹிஜா முஸாபிர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதேபோன்று மாணிக்கமடு கோவில் தலைவர் திரு ஏகாம்பரம் அவர்களும் இவ் உலர் உணவுப் பொருட்களை வழங்கிய ஆலையடிவேம்பு தமிழர் மேம்பாடு பேரவையினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்

 

Tags :
comments