சவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 2523 பேர் பாதிப்பு

  • April 8, 2020
  • 158
  • Aroos Samsudeen
சவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 2523 பேர் பாதிப்பு
சவுதி அரேபியாவில் இதுவரை கொரோனாவுக்கு 2523 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் 2 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக மந்திரி எச்சரித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் இதுவரை 2523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்கள் மிகவும் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறை மந்திரி தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவ்ஃபிக் அல்-ரபியா கூறுகையில் ‘‘இன்னும் சில வாரங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கணித்துள்ளன. கொரோனா வைரசுக்கு எதிராக போரிட நாடு மிகவும் கடுமையான நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சவுதி அரேபியால் பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தபுக், தம்மாம், தஹ்ரான் ஹோபுஃப் போன்ற நகரங்கள் இதில் அடங்கும். ஏற்கனவே புனித நகரமான மெக்கா மற்றும் மதினா ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.
Tags :
comments