கல்வியை மேம்படுத்த தந்தையின் வழியில் உண்மையுடன் உழைப்பேன் றிஸ்லி முஸ்தபா.

  • April 28, 2020
  • 531
  • Aroos Samsudeen
கல்வியை மேம்படுத்த தந்தையின் வழியில் உண்மையுடன் உழைப்பேன் றிஸ்லி முஸ்தபா.

(பீ.எம்.றியாத்)

மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலேயே எனது தந்தையார் உயர் கல்வி பிரதி அமைச்சராக பதவி வகித்தார். இந்நாட்டின் மாணவர்களுக்கு நிரந்தரமான செல்வம் கல்வியே ஆகும்.அத்துடன் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கான மயோன் பவுண்டேசன் கணிசமான நிதியை வருடா வருடம் செலவு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற தோற்றிய அனைத்து மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என திகாமடுல்ல மாவட்டம் பாராளுமன்ற வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

இப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்விப் பொதுத் தராதர உயர்தர கற்கையினை தொடர்வதற்கு தகுதிபெற்றுள்ளனர். இம்மாணவர்கள் தமது உயர்தர கல்வியினை மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் கற்றுச் சிறப்பதற்கும் ஏனைய மாணவர்கள் தன்னம்பிக்கையோடு செயற்பட்டு எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளைப் பெறுவதற்கும் ஏக இறைவனிடம் புனிதமான ரமழானில் பிரார்த்தனை செய்கின்றேன்.

இம்மாணவர்களின் வெற்றிக்கு பக்கபலமாகச் செயற்பட்ட கல்வி சமூகம் குறிப்பாக அதிபர், ஆசிரியர்கள்,தாய்,தந்தை,பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் ஏனைய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Tags :
comments