உலக ஊடக சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

  • May 3, 2020
  • 181
  • Aroos Samsudeen
உலக ஊடக சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

நான் உண்மையிலேயே எனது ஊடகத்துறையை அதிகம் நேசிக்கிறேன், ஏனென்றால் அது என்னை  விழித்திருக்க செய்கிறது, யார் கண் விழிக்காவிடினும் ஒரு ஊடகவியலாளர் விழித்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு ஊடகவியலாளர் சரியான முறையில் தகவல்களை மற்றும் உண்மைச் செய்திகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றே ஒவ்வொரு வினாடியும் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களின் எழுத்துக்களை செப்பமிட்டு பத்திரிகைகளில்  வெளியிடுவதற்காக..

ஊடகத்துறையானது  தெரியாத விடயங்களுக்கு பதில்களை இன்னும் தேடுவதில் உந்து சக்தி ஊட்டுகிறது..

மேலும் தெரியாத விடயங்களைக் கண்டறியவும்

உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான எங்களுக்கான ஓர் கருவியாகவும் இது காணப்படுகிறது…

அந்தவகையில்  இந்த துறையை வழிகாட்டிதந்த  இறைவனுக்கும், பெற்றோர்களுக்கும், எனது செய்திகளை வெளியிட்ட  அனைத்து பத்திரிகைகள் ,செய்தி இணையத்தளங்கள் எனக்கு ஊடகத்தில் எனது திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கிய SLBC வானொலி என்னை  இன்னும் ஆர்வமூட்டிய என் ஊடக நண்பர்கள்,  என்னை இந்த துறையில் இன்னும் வளர எனக்கு பக்கபலமாக இருப்போர் அனைவருக்கும்

உலக ஊடக சுதந்திர பத்திரை தினத்தன்று எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..

World Press Freedom Day

Journalist SilmiyaYousuf

Tags :
comments