கல்முனையன்ஸ் போரமினால் பேரீச்சம்பழம் வழங்கிவைக்கப்பட்டது.

  • May 7, 2020
  • 290
  • Aroos Samsudeen
கல்முனையன்ஸ் போரமினால் பேரீச்சம்பழம் வழங்கிவைக்கப்பட்டது.
(ஏ.பி.எம்.அஸ்ஹர் எம்.எம்.ஜெஸ்மின்)
கொவிட் 19 இடர் நிலையினால் வாழ்வாதர ரீதியாகப்பாதிக்கப்பட்டுள்ள. அம்பாரை மாவட்டத்திலுள்ள வறிய.மக்களுக்கு புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம்பழம் வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் இன்று ஆரம்பித்து  வைக்கப்பட்டது.
போரத்தின் செயற்பாட்டாளர் பீ.எம்.சன்ஸீர் தலைமையில் கல்முனை இக்பால் சன சமூக நிலையத்தில் இன்று புதன்கிழமை.இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  அதிதியாகக்கலந்துகொண்டு இச்செயற்றிட்டத்தை ஆரம்பித்து  வைத்தார்.
கல்முனையன்ஸ் போரம் விடுத்தவேண்டுகோளுக்கமைய சுமார்  6 தொன் பேரிச்சம் பழத்தினை பெஸ்ட் பூட்  மார்கடிங் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.
இப் பேரீச்சம்பழங்கள்  அம்பாரை  மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புக்களூடாக  இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற கல்முனையன்ஸ் போரம் நாட்டில் நிலவும் கொவிட்-19 இடர் நிலையில் சுமார் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் நிவாரணங்களாக கடந்த ஏப்ரல் மாதம் கல்முனையன்ஸ் போரம் கல்முனை பிராந்தியத்தில் விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எம். எம்.ஜெளபர் போரத்தின் முக்கியஸ்தர்களான எம்.எம்.ஜமால்தீன் எஸ்.எல்.எம்.பெளமி.உட்பட
தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Tags :
comments