சுகாதார பாதுகாப்புடனான தேர்தலை நடாத்த விஷேட வழிகாட்டல்கள் – விஷேட குழு நியமிப்பு

  • May 16, 2020
  • 220
  • Aroos Samsudeen
சுகாதார பாதுகாப்புடனான தேர்தலை நடாத்த விஷேட வழிகாட்டல்கள் – விஷேட குழு நியமிப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)
சுகாதார பாதுகாப்புடன் கூடிய தேர்தல் ஒன்றினை நடாத்துவது எப்படி என்பதை தீர்மானிக்கவும் அது தொடர்பிலான வழி காட்டல்களை தயாரிக்கவும்  மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க  இந்த குழுவை நியமித்துள்ளார்.
 சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு குறித்த விஷேட நிபுணத்துவம் கொண்ட அதிகாரி ஒருவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரிய முடிகின்றது.
 இந்த குழுவானது, முதலில் தேர்தல்கள் ஆணைக் குழுவுடன்  கலந்துரையாடலை நடாத்தவுள்ளது. அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு அவசியமான விடயங்கள் குறித்த தெளிவைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல்,  சுகாதார பாதுகாப்புடன் கூடிய தேர்தலுக்கான வழிகாட்டல்களை தயார் செய்து வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
Tags :
comments