தொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிறன்று – பூரண அரச மரியாதை !

  • May 27, 2020
  • 142
  • Aroos Samsudeen
தொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிறன்று – பூரண அரச மரியாதை !

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் நடைபெறவுள்ளது.

நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இன்று காலை 11 மணிக்கு ஜயரத்ன மலர்ச்சாலையில் இருந்து அவரது பூதவுடல் கொழும்பு இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

நாளை பாராளுமன்றத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது பூதவுடல் வெள்ளிக்கிழமைஅவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.வெள்ளிக்கிழமை இறம்பொடை இல்லத்திலும் சனிக்கிழமை கொட்டகலை சி எல் எவ் நிலையத்திலும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பூதவுடல் நோர்வூட் பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகளை நடத்த ஏற்பாடாகியுள்ளது.

ராஜலக்ஷ்மி அம்மையாரை துணைவியாக கொண்ட அமைச்சர் ஆறுமுகம் , நாச்சியார் , விஜயலக்ஷ்மி , ஜீவன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

ஜீவன் , விஜயலக்ஷ்மி ஆகியோர் கொழும்பில் வசித்து வருகின்றனர் நாச்சியார் தற்போது மஸ்கட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தந்தையின் இறுதிக்கிரியையில் கலந்துகொள்ள அவர் எயார் இந்தியாவின் விசேட விமானமொன்றில் இலங்கை வர ஏற்பாடாகியுள்ளது.

அமரர் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் அதேசமயம் தற்போதைய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.

 

Tags :
comments