ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மணலால் மூடப்பட்டதன் பிற்பாடு அங்கு தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தத்தமது பிரதேசங்களுக்கு தங்களது படகுகளை நகர்த்திக்கொண்டு தொழிலில் ஈடுபடத்தொடங்கினர். ஒலுவில் பிரதேசம் தவிர்ந்த பாலமுனை, அட்டாளைச்சேனை கடற்கரையின் கரைப்பகுதி மிக நீளமாகவுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளுக்கு தேவையான பொருட்களை கொண்டுசெல்வதிலும், படகின் இயந்திரம் பழுதடைந்தால் அதனை திருத்துவதற்கு தோளில் சுமந்துவருகின்ற துக்ககரமான நிகழ்வுகளே அரங்கேறியது.
நிலமை இவ்வாறிருக்க மீனவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒருசில அரசியலவாதிகளினால் எவ்வித அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளாது வீதியொன்று நிர்மாணிக்கப்படது. அதனால் ஏற்பட்ட குளறுபடிகளினால் அவ்வீதி கலையோரம் பேணல் திணைக்களத்தினால் தோண்டி அகற்றப்பட்டது.
குறித்த அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறபா வட்டார உறுப்பினர் ஜெமீலா ஹமீட்டினால் 2020.06.18ஆந் திகதிய சபை அமர்வில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பிரேரணை பிரதே சபையில் அங்கீகரிக்கப்பட்டதுடன், உரிய நிறுவனங்களின் அனுமதியை பெற்று குறித்த பிரதேசத்தில் மீனவர்களின் தேவையாகவுள்ள வீதிகளை நிர்மாணிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது