இலங்கை கிரிக்கெட்டுடன் பங்குதாரர்களாகும் மை கோலா

  • July 2, 2020
  • 148
  • Aroos Samsudeen
இலங்கை கிரிக்கெட்டுடன் பங்குதாரர்களாகும் மை கோலா

இலங்கை கிரிக்கெட் அணியின் கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கான உத்தியோகபூர்வ பங்குதார்களுக்கான மூன்று வருட ஒப்பந்தத்தினை மை கோலா ப்ரைவட் லிமிடட் நிறுவனம் நேற்று (01) பெற்றுக்கொண்டது.

குறித்த ஒப்பந்தம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாகsள கையெழுத்திடப்பட்ட நிலையில்,  இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா இதுதொடர்பில் கருத்து வெளியிட்டார். “எமது அணியின் கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கான பங்குதார்களாக மை கோலா நிறுவனம் இணைந்துள்ளமை மகிழ்ச்சிளிக்கிறது. அத்துடன், இலங்கை கிரிக்கெட் மீதும், கிரிக்கெட்டின் மீது அவர்களுக்கு உள்ள பற்றையும் நாம் பாராட்டுகிறோம்.

அதேநேரம், இதுபோன்ற நேரத்தில் பங்குதார்களாக இணைந்துள்ளமை ஒரு சிறந்த தருணத்தை உருவாக்கியிருக்கிறது. கொவிட்-19 காரணமாக கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் மீண்டு வருவதற்கும், அதன் மீது ரசிகர்களுக்கும் உள்ள எதிர்பார்ப்பையும் மை கோலாவின் இந்த ஒப்பந்தம் அதிகரித்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மை கோலா நிறுவனம் இலங்கையில் உற்பத்தி, சந்தைப்படுத்தல், விநியோகம் போன்ற விடயங்களை கார்பனேற்றப்பட்ட பானங்களுக்காக இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக கோலா, ஆரஞ்சு, லெமன், பெரி, ஜின்ஜர் மற்றும் க்ரீம் ஷோடா, ஷோடா போன்ற பானங்களை இலங்கைக்கு வழங்கி வருகின்றனர்.

அதன்படி, புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மை கோலா நிறுவனம் கிரிக்கெட் அணியின் வீரர்கள், நிகழ்வுகள், உத்தியோகபூர்வ நிகழ்வுகள், விருந்தினர்கள் மற்றும் உயர் விருந்தினர்கள், விருந்தோம்பல்கள், ஊடகவியலாளர்கள், போட்டியின் ஒளிபரப்பு ஊழியர்கள் என அனைவருக்கும் தங்களுடைய உற்பத்திகளை விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளது.

தங்களுடைய இந்த ஒப்பந்தம் குறித்து மை கோலா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷார்ம் பெர்னாண்டோ குறிப்பிடுகையில், “எமது 16 வருட பயணத்தில் இலங்கை கிரிக்கெட்டின் கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கான பங்குதாரர்களாக இணைவது மிகப்பெரிய மைல்கல்லாகும்.  இதனை எட்டுவதற்கு முக்கியமான காரணம், சர்வதேச பானங்களின் தரத்துக்கு ஏற்ற வகையில் இதனை உற்பத்தி செய்வதற்கு மேற்கொண்ட எமது கடின உழைப்பாகும்” என அவர் குறிப்பிட்டார்.

Tags :
comments