கிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ்

  • July 10, 2020
  • 279
  • Aroos Samsudeen
கிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ்

இலங்கை கிரிக்கட் சபையின் நடுவர்களுக்கான விரைவு தரமுயர்வு (Fast Track Promotion) பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு கடந்த 2019 இறுதிப்பகுதியில் இலங்கை கிரிகட் சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

சென்ற வருட இறுதியில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற பதவி உயர்வு பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் நடுவர் தரம் ஐந்திலிருந்து நான்கிற்கு   பாலமுனையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாயிஸ் நேரடியாக தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் பாலமுனை கிரிக்கட் வரலாற்றிலே இலங்கை கிரிக்கட் நடுவர் குழாம் நான்கிற்கு தெரிவாகிய முதலாவது நடுவராக ஐ.எல்.எம்.பாயிஸ் தடம் பதித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2020-07-09 ம் திகதி ஆர் பிரேமதாச (கெத்தாராம) சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இவருக்கான பதவி உயர்வு இலங்கை கிரிக்கட் சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

பாலமுனை ரைஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவரான ஐ.எல்.எம்.பாயிஸ் பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தின் விளையாட்டாசிரியராக கடயைமாற்றி வருகின்றார்.அத்தோடு ரக்பி விளையாட்டில் கிழக்கு மாகாண பாடசாலைகள் இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அம்பாரை மாவட்டத்தில் விளையாட்டுக் கழகங்கள் மட்டத்திலும், பாடசாலைகள் மட்டத்திலும் ரக்பி விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஐ.எல்.எம்.பாயிஸ் அவர்கள் ரக்பி விளையாட்டின் கிழக்கு மாகாண முன்னோடியாகப் பார்க்கப்படுகின்றார்.

ஊடகத்தறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் முதன்மை செய்தி இணையத்தளமான களம் பெஸ்ட்டின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் உதவி செய்தியாசிரியராகவும் பணியாற்றி வருகின்றமை விசேட அம்சமாகும்.

மிகச்சிறந்த கிரிக்கட் வீரரான ஐ.எல்.எம்.பாயிஸ் ஆரம்பத்துடுப்பாட்டக்காரராக விளையாடி தனது கழகத்திற்கும், மாவட்டத்திற்கும் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த வீரா் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments