தயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன்

  • July 14, 2020
  • 215
  • Aroos Samsudeen
தயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் வெற்றி பெறும் வேட்பாளர்களில் உள்ளடங்க மாட்டார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் இதனை கூறியுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, குருணாகல் மாவட்டத்திற்கு சென்று இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் உரையாற்றினால், தயாசிறி ஜயசேகரவுக்கு மீதமிருக்கும் விருப்பு வாக்குகளும் கிடைக்காமல் போகும் என ஜோன்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அடுத்த சில தினங்களில் குருணாகல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த கூட்டங்களில் உரையாற்ற திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு பகிரங்கமாக ஒருவரை ஒருவர் பொது மேடைகளில் விமர்சித்து வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தமையை அடிப்படையாக கொண்டு இவருக்கும் இடையில் இந்த கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
Tags :
comments