மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள் – புதிய அரசமைப்பிற்கான மக்களின் ஆணையை கோரினார் மகிந்த

  • July 18, 2020
  • 132
  • Aroos Samsudeen
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள் – புதிய அரசமைப்பிற்கான மக்களின் ஆணையை கோரினார் மகிந்த
புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான மக்களின் ஆணையை ஸ்ரீலங்கா பொதுஜனமுரன கோரவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொகுவலயில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனது கட்சி கோருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல தடவைகள் அரசமைப்பு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள பிரதமர் தனது கட்சி அரசமைப்பு மாற்றங்களை முன்னெடுக்காது மாறாக புதிய அரசமைப்பை உருவாக்க முயலும் என தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது எனினும் நாடாளுமன்றத்தின் முழுமையான ஆதரவு இன்மையால் அது சாத்தியமாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags :
comments