அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

  • July 22, 2020
  • 147
  • Aroos Samsudeen
அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்
ஈரான் முக்கிய ராணுவத் தலைவரான குவாசிம் சொலைமானி கொல்லப்பட்டதில், அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கப்படை ஈராக் எல்லையில் ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட சொலைமானியை விமானத் தாக்குதல் நடத்தி கொன்றது. இதில் மற்றும் சில முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
சொலைமானி கொல்லப்படுவதற்கு முன் அவரது நடமாட்டம் குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ.-விற்கு ஈரானைச் சேர்ந்த முகமது மௌசாமி மஜ்த் என்பவர் உளவு பார்த்து தகவல் கூறியதாக குற்றம்சாட்டப்ட்டது.
மேலும், இஸ்ரேலின் உளவுத்துறைக்கும் உளவு பார்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முகமது மௌசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Tags :
comments