உடல் கட்டழகர் போட்டியில், முதலாமிடம் பெற்ற அமீன்

  • July 28, 2020
  • 168
  • Aroos Samsudeen
உடல் கட்டழகர் போட்டியில், முதலாமிடம் பெற்ற அமீன்
அரனாயக்க தல்கஸ்பிடியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். அமீன் கேகாலை மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட உடல் கட்டழகர் முதலாமிடம் பெற்று, மிஸ்டர் கேகாலையாக தெரிவாகியுள்ளார்.
 
கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற 7 ஸ்டார் உடல் கட்டழகர் போட்டியில் 80 கிலோ பிரிவின் கீழ் எம்.எஸ்.எம். அமீன் முதலாம் இடம் பெற்றுள்ளார். 
 
கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை எம்பெயார் ஜிம் மற்றும் கேகாலை மாவட்ட உடல் கட்டழகர் மற்றும் தேகாரோக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தன. 
 
தல்கஸ்பிடியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். அமீன், தேக ஆரோக்கியம் மற்றும் உடற் பயிற்சித் துறையில் NVQ 04 பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags :
comments