எல்லா இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இவ் தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் அமையட்டும்

  • August 1, 2020
  • 129
  • Aroos Samsudeen
எல்லா இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இவ் தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் அமையட்டும்
(எம் .என்.எம்.அப்ராஸ்)

உலகளாவிய ரீதியில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்ததுக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடாக இந்த ஹஜ் தினம்நினைவுபடுத்தப்படுகிறது தியாகத்தின் வரலாறு எமக்கு நல்ல பாடத்தை புகட்டுவதாகவும்,
எல்லா இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இவ் தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் அமையட்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து சுகாதர விழுமியங்களை பேணி ஹஜ்ஜுப் பெருநாளை நிறைவான பிரார்த்தனையுன் கொண்டாடுவோம்.மேலும் நாட்டின் நிலமை சீரடைந்து முற்றிலும் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப பிரார்த்திப்பதுடன்,
தியாகப் பெருநாள் தினத்தில் நாம் எல்லோரும் ஹஜ்ஜுக்கு உரித்தான புனிதத் தன்மையை உணர்ந்து எம்மிடையே காணப்படும் வேற்றுமையை களைந்து
அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக ஒற்றுமையுடன் சகிப்புத்தன்மையுடன் வாழ
வேண்டும் .உள்ளம் நிறைந்த இத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

Tags :
comments