உயிருடன் இருந்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன், இது எனது இறுதி ஊடக சந்திப்பு – தேசப்பிரிய

  • August 6, 2020
  • 93
  • Aroos Samsudeen
உயிருடன் இருந்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன், இது எனது இறுதி ஊடக சந்திப்பு – தேசப்பிரிய
தாம் கலந்து கொள்ளும் இறுதி ஊடக சந்திப்பு இது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
பொதுத் தேர்தல் தொடர்பில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் பேசுகையில்,
 
இது நான் பணியாற்றும்  இறுதி தேர்தல், உயிருடன் இருந்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன். 37 ஆண்டுகள் நான் இங்கு பணியாற்றியுள்ளேன். 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நான் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைந்தேன். 1984 ஆம் ஆண்டுமுதல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன், நான் இவ் ஆணைக்குழுவில் செய்யாத பணிகள் இல்லை, வாக்கு பெட்டிகளையும் சுமந்துள்ளேன். அணைவருக்கும் மிக நன்றி நான் மீண்டும் இவ் இடத்திலிருந்து  ஊடக சந்திபை மேற்கொள்ள மாட்டேன் என்றார்.
Tags :
comments