ஹரீஸ் எம்.பி தலைமையில் புதிய முஸ்லிம் கட்சி உதயம்?

  • August 23, 2020
  • 474
  • Aroos Samsudeen
ஹரீஸ் எம்.பி தலைமையில் புதிய முஸ்லிம் கட்சி உதயம்?

அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆரம்பித்துள்ளனர் என சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர் என சிலோன்டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுபான்மை கட்சியொன்றை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையிலும் முக்கிய எதிர்கட்சியிடமிருந்து

தேசியபட்டியல் ஆசனங்களை பெறுவதில் சிறுபான்மை கட்சிகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையிலும் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சிலோன் டுடே தெரிவித்துள்ளது.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளதை முக்கிய அரசியல்வாதியொருவர் உறுதிசெய்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் உள்ள நிலையில் அரசாங்கம் ஏன் சிறுபான்மை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுகின்றது என்ற கேள்விக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உள்ளனர் என சிலோன் டுடே தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஹாபீஸ் நஸீர் அஹமட் இருவரும் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் புதிய முஸ்லிம் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Tags :
comments