எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த, குணம் கொண்ட ஒரு நபர் – சங்கக்கார

  • September 26, 2020
  • 113
  • Aroos Samsudeen
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறந்த, குணம் கொண்ட ஒரு நபர் – சங்கக்கார

மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தனது இரங்கலை டுவிட் செய்துள்ளார்.

இதில் தான் ஒரு நாள் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை நேரில் சந்தித்ததாகவும் அவர் ஒரு சிறந்த குணம் கொண்ட நபர் எனவும் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவரது இழப்பு பல மில்லியன் மக்களுக்கான ஓர் சோகச்செய்தியாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
comments