தேசிய பகிரங்க அலைச்சறுக்கு போட்டியில் லக்ஸித்த மதுசான் தேசிய சம்பியனாக தெரிவு

  • September 27, 2020
  • 192
  • Aroos Samsudeen
தேசிய பகிரங்க அலைச்சறுக்கு போட்டியில் லக்ஸித்த மதுசான் தேசிய சம்பியனாக தெரிவு

(எஸ்.எம்.அறூஸ் -ஹம்தான் அறுகம்பையிலிருந்து)

அறுகம்பையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற தேசிய பகிரங்க அலைச்சறுக்கு போட்டியில் தேசிய சம்பியனாக  வெலிகம விளையாட்டுக் கழகத்தின் லக்ஸித்த மதுசான் தெரிவானார். இவர் 2 ஆயிரம் புள்ளிகள் பெற்றே முதலிடத்தை தட்டிச் சென்றார். இரண்டாமிடத்தை அறுகம்பை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த லசித்த பிரபாத் பெற்றுக்கொண்டார். மூன்றாமிடத்தை பிரனித் சந்தருவன் பெற்றார்.

ஆண்களுக்கான திறந்த மட்ட போட்டியில் சம்பியனாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொண்ட அறுகம்பை விளையாட்டுக் கழகத்தின் அசங்க சஞ்சீவ தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாமிடத்தை இஸ்ரேல் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய பார் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தை அவுஸ்திரேலிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய லியாம் முராட் பெற்றுக்கொண்டார். இப்போட்டி நிகழ்ச்சியில் நான்காம் இடத்தை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அறுகம்பை விளையாட்டுக் கழகத்தின் மிலான் பெற்றுக்கொண்டார்.

பெண்களுக்கான திறந்த மட்டப் போட்டியில் சம்பியனாக தென்ஆபிரிக்க நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொண்ட நிக்கிட்டா ரொப் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாமிடத்தை எஸ்டோனியா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய குறூட் லீசன் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாமிடத்தை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுனாரா ஜெயமன்ன பெற்றுக்கொண்டார்.

தேசிய மட்ட ஆண்கள் பிரிவில் சம்பியனாக வெலிகம விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய லக்ஸித மதுசான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டாமிடத்தை அறுகம்பை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அசங்க சஞ்சீவ பெற்றுக்கொண்டதுடன் மூன்றாமிடத்தை அறுகம்பை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அசித்த பிரபாத் பெற்றார்.

இறுதி நாள் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை ஸ்பொர்ட் ரைசிங் நிறுவனத் தலைவர் திலக் வீரசிங்க, இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜகத், மொபிடல் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரவீன் விக்ரமரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற பெற்ற வீர, வீராங்களைகளுக்கு வெற்றிக் கேடயங்களையும், சான்றினதழ்களையும் வழங்கி வைத்தனர். அத்தோடு அலைச்சறுக்கு உபகரணங்களையும் வழங்கினர்.

இலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் நிறுவனம் இனைந்து ஏற்பாடு செய்த தேசிய பகிரங்க அலைச்சறுக்கு சம்பியன்ஸ்சிப் போட்டிக்கு மொபிடல் நிறுவனமும், ஏசியா ஹோல்டிங் நிறுவனமும் பிரதான அனுசரனையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொவிட் 19 தொற்றின் பின் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்காகவும் கிழக்கு மாகாண உல்லாசப்பயணத்துறையை வளர்ச்சியடையச் செய்வதற்காகவும் உலக உல்லாச தினத்தை முன்னிட்டும் தேசிய அலைச்சறுக்கு சம்பியன்சிப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments