நையடிப்பு செய்யப்பட்டார் கிழக்கின் முன்னாள் முதல்வர்

  • October 23, 2020
  • 173
  • Aroos Samsudeen
நையடிப்பு செய்யப்பட்டார்  கிழக்கின் முன்னாள் முதல்வர்

(இர்ஷாத் ஜமால்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய  மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அவர்கள் நையடிப்புச் செய்யப்பட்டுள்ளார்.

ஆளும் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் மீதான இரண்டாவது வாக்கெடுப்பின் பின்னரே அவர் நையடிப்புச்  செய்யப்பட்டார்.

வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எம்பிகளான HMM ஹரீஸ், CM பைசல் காசிம், AC. தொளபீக் மற்றும் ஹாபிஸ் நசீர் ஆகியோர் 20ஐ ஆதரித்து வாக்களித்தனர்.  இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 100 ரூபா நோட்டை அசைத்தவாறே நையடிப்புச் செய்தார்.

நையடிப்புச் செய்யப்பட்டது வீடியோக் காட்சியானது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வருகின்றது.

Tags :
comments