கல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது

  • October 23, 2020
  • 132
  • Aroos Samsudeen
கல்முனை கடற்கரை மைதானம் சீர்படுத்தப்பட்டது

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை கடற்கரை மைதானத்தின் குறைபாடுகள் தொடர்பாக கல்முனை பால்கன் விளையாட்டுக் கழகத்தின் அதன் தலைவர் யூ.கே. லாபீர் மற்றும் செயலாளர் எம்.எம்.முகம்மது காமில் ஆகியோர் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.எஸ்.நிசார் அவர்களின் கவனத்திற்கு மேற்குறித்த விடயத்தை அண்மையில் கொண்டு சென்றதன் பலனாக மேற்குறித்த கடற்கரை மைதானத்தின் குறைபாடுகள் அனைத்தும் மிகவிரைவில் சீர் செய்யப்படும் என்ற மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.நிசார் அவர்களின் வாக்குறுதிக்கு அமைய மாநகர சபை உறுப்பினர் அவர்களின் தலைமையில் கல்முனை மாநகர சபையினால் மேற்குறித்த கடற்கரை மைதானத்தை சீர் செய்யும் பணியானது நேற்று( 22)   இடம்பெற்றது.

மேற்குறித்த  பணியை  மிக துரிதமாகநிறைவேற்றி கல்முனை பிராந்தியத்தின் விளையாட்டு வீரர்களின் விளையாட்டுசெயற்பாடுகளுக்குஉறுதுணையாக இருந்து செயற்பட்ட மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.நிசார் மற்றும் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கீப் அவர்களுக்கும் இந்த வேலைத்திட்டத்தில் பங்களிப்பு செய்த கல்முனை மாநகர சபையின் ஊழியர்கள் அனைவருக்கும் கல்முனை பால்கன் விளையாட்டுக் கழகமானது தனது நன்றிகளையும் தெரிவித்தனர்.

Tags :
comments