காணாமல் போன கம்மன்பிலவும் வீரவன்ஸவும்

  • October 30, 2020
  • 129
  • Aroos Samsudeen
காணாமல் போன கம்மன்பிலவும் வீரவன்ஸவும்
அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வந்த நேரம் அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் எங்கு சென்றனர் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில்

நாங்கள் அமெரிக்காவிற்கு எதிராகவோ சீனாவிற்கு இந்தியாவிற்கு எதிராகவோ அல்லது வேறுநாடுகளுக்கு எதிராகவோ கருத்து வெளியிடவில்லை.

ஆனால் கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட அரசாங்க உறுப்பினர்களை தற்போது காணமுடியவில்லை.

குறிப்பாக உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோரை காணவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags :
comments