20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் Mp க்களை, அரசாங்கத்துடன் இணைக்கக் கூடாது – குணதாச அமரசேகர

  • November 2, 2020
  • 124
  • Aroos Samsudeen
20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் Mp க்களை, அரசாங்கத்துடன் இணைக்கக் கூடாது – குணதாச அமரசேகர
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டாம் என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

வாராந்த தேசிய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தாலும் அவர்களில் எவரையும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்ளக் கூடாது என்பது பிரதான விடயம்.

அவர்கள் ஏதேனும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்டால், அரசாங்கத்தில் இருந்து விலக போவதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

நாங்களும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளோம். வாக்களித்தாலும் அவர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளக் கூடாது.

அரசாங்கம் இது தொடர்பாக கடுமையான தீர்மானத்தில் இருக்க வேண்டும். வாக்களித்தாலும் அவர்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கக் கூடாது. அமைச்சர் பதவி, அமைப்பாளர்கள் பதவிகள் என எதனையும் அவர்களுக்கு வழங்கக் கூடாது.

எமது சிங்கள மக்களுக்கு தேசிய உணர்வு கிடையாது. காரணம் எதுவாக இருந்தாலும் எமது தேசிய அமைப்பின் எதிர்ப்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை.

சிங்கள மக்களை ஒன்றிணைக்க முடியாது போயுள்ளது. சிங்கள மக்கள் ஒன்றிணையாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. சிங்கள அமைப்புகளுக்கு சிங்கள மக்கள் மற்றும் தேசியம் தொடர்பான உணர்வு இருக்க வேண்டும் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Tags :
comments