Jaffna Stallions இலங்கைக்கான தொடர்பாடல் மற்றும் ஊடகப் பணிப்பாளராக சாரங்க விஜயரத்ன நியமனம்.

  • November 9, 2020
  • 158
  • Aroos Samsudeen
Jaffna Stallions இலங்கைக்கான தொடர்பாடல் மற்றும் ஊடகப் பணிப்பாளராக சாரங்க விஜயரத்ன நியமனம்.

(எஸ்.எம்.அறூஸ்)

Lanka Premier League (LPL) போட்டிகளில் கலந்து கொள்ளும் Jaffna Stallions அணியின் இலங்கைக்கான தொடர்பாடல் மற்றும் ஊடகப் பணிப்பாளராக சாரங்க விஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.

திரு. விஜயரத்ன அண்மைக் காலம் வரை இலங்கையின் தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தின் பணிப்பாளராகவும், அதற்கு முன்னர் இலங்கையின் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களில், குறிப்பாக விஐய பத்திரிகை நிறுவனத்திலும் சிலோன் பத்திரிகை நிறுவனத்திலும், முக்கிய பொறுப்புக்களில் கடமையாற்றியுள்ளார்.

தனது நியமனம் பற்றிக் கருத்துத் தெரிவித்த திரு. விஜயரத்ன “LPLன் உற்சாகமளிக்கும் பூர்வாங்க ஆண்டில், Jaffna Stallions அணியுடன் இணைவதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
“நீண்ட காலத் திட்டமிடலுடன், இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளிக்கும் ஒரு தனித்துவமான உன்னத நோக்கத்துடன் Jaffna Stallions அணி உருவெடுத்திருக்கிறது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து UK, Canada,Australiaவில் வதியும் Jaffna Stallions அணியின் நிர்வாகிகளுடன் இணைந்து, LPL அளித்திருக்கும் இந்தநல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த கிரிக்கெட் வீரர்களின் திறன்களை மேலும் விருத்தியடைச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்” என்று திரு. விஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

Jaffna Stallions அணியின் தலைமை நிர்வாகி (CEO) செல்வா வரன் “இலங்கையின் அச்சு,இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகத் துறைகளில் சிறப்பான அனுபவசாலியான சாரங்க விஜயரத்னவின் நியமனம், Jaffna Stallion அணியின் நிர்வாகத்திற்கு நிச்சயமாக பலமளிக்கும். குறிப்பாக,சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் ஊடக மூலோபாயத் துறைகளில் திரு. விஜயரத்ன எமது அணியின் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றுவார்” என்றார்.

Jaffna Stallions அணியின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் மகேஷ் அபேயவர்தன “சாரங்கவிஜயரத்னவின் நியமனம், சரியான நேரத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது நியமனம் நாங்கள் மூன்று மொழிகளிலும் எங்களது ஊடக மூலோபாயத்தை வழிவகுக்க ஏதுவாக அமையும். அவரை Jaffna Stallions அணிக்கு வரவேற்கும் அதே வேளை, அவரது அபாரமான பட்டறிவில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும்பயனுற ஆவலாக இருக்கின்றோம்” என்றார்.

 

Tags :
comments