அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பட்ஜட் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றம்

  • November 12, 2020
  • 316
  • Aroos Samsudeen
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பட்ஜட் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றம்

(எஸ்.எம்.அறூஸ்)

அட்டாளைச்சேனை பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது .

அட்டாளைச்சேனை தேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில்  இன்று (12) இடம்பெற்றது.

இந்த அமர்வின் போது அடுத்தாண்டுக்கான வரவு -செலவுத்திட்ட அறிக்கையை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா சபையில் சமர்ப்பித்தார்.சபையின் தவிசாளர் உள்ளிட்ட 18 உறுப்பினர்கள் ன்றைய அமர்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது வாக்களிப்பில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதன்போது வரவு -செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 15 உறுப்பினர்களும், எதிராக ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். இதன் காரணத்தினால் 14 பெரும்பான்மை வாக்குகளினால் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பான ஆறு உறுப்பினர்களில் ஏ.எல்.அஜ்மல் தனி ஒருவராக எதிர்த்து வாக்களித்ததுடன், ஜெமீலா ஹமீட், யாஸ்மீன் சலீம், எம்.எச்.எம்.நிஹால் ஆகிய மூன்று உறுப்பிகள் ஆதரவாக வாக்களித்ததுடன் ஏ.பி.பதுறுதீன்,தாமர ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பான உறுப்பினர்கள் எம்.சிராஜ், ஏ.எல்.எம்.ஹம்ஸா, ஆர்.றிபா ஆகிய மூவரும் ஆதரவாக வாக்களித்தனர். பொதுஜன பெரமுன கட்சி சார்பான ஒரே ஒரு உறுப்பினர் குமார ஆதரித்து வாக்களித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குள் இருக்கின்ற ஒரு சபையாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஒன்பது 8 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 08 உறுப்பினர்களும், தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் -06 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் -03 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் 01 உறுப்பினரும் என மொத்தமாக 18 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2021ம் வருடத்திற்கான வரவு – செயலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு -செலவுத் திட்ட அறிக்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு தமது கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஒரே ஒரு உறுப்பினர் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :
comments