Jaffna Stallions அணியின் பயிற்சிகள் ஆரம்பம்

  • November 13, 2020
  • 124
  • Aroos Samsudeen
Jaffna Stallions அணியின் பயிற்சிகள் ஆரம்பம்

Lanka Premier League (LPL) சுற்றுப் போட்டிகளிற்கான பயிற்சிகளை ஆரம்பித்த முதலாவது அணியாக Jaffna Stallions அணி விளங்குகிறது. அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான Thilina Kandambyயின் நேர்த்தியான வழிகாட்டலில், Thisara Perera தலைமையிலான Jaffna Stallions அணி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில், நவம்பர் 13 முதல் 15 வரை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

Jaffna Stallions அணியில் அங்கம் வகிக்கும் அனைத்து இலங்கை வீரர்களும் இந்தப்
பயிற்சிப் பாசறையில் கலந்து கொள்வார்கள்.

Jaffna Stallionsன் பயிற்சிப் பாசறையில் கலந்து கொள்ளும் வீரர்கள்:
Thisara Perera, Wanindu Hasaranga, Avishka Fernando,Dhananjaya de Silva, Suranga Lakmal, Binura Fernando, Minod Bhanuka, Chaturanga de Silva, Mahesh Theekshana, Charith Asalanka, Nuvinidu Fernando, Kanagaratnam Kapilraj, Theivendiram Dinoshan மற்றும் Vijayakanth Vyaskanth.

வடக்கு மாகாணத்திலிருந்து வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களான Kanagaratnam Kapilraj, Theivendiram Dinoshan மற்றும் Vijayakanth Vyaskanth ஆகியோரின் உள்ளடக்கம் இந்தப் போட்டிகளிற்கு புதிய பரிணாமத்தை அளிக்கிறது.

Jaffna Stallions அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழாம்:
Thilina Kandamby – Head Coach,
Hemang Badani – Consultant,
Mario Villavarayan – Trainer Cum Fast Bowling Coach,
Sachith Pathirana – Spin Bowling Coach,
Vimukthi Deshapriya – Fielding Coach

Jaffna Stallions அணியில் அங்கம் வகிக்கும் 20 கிரிக்கெட் வீரர்களில், 14 பேர் இலங்கையில் இருந்தும் 6 பேர் வெளிநாடுகளில் இருந்தும் தேர்வாகியுள்ளனர். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டில் அனுபவமிக்க பல சகலதுறை ஆட்டக்காரர்களின் உள்ளடக்கம், Jaffna Stallions அணியின் மிகப்பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jaffna Stallions அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான Thilina Kandamby “LPL சுற்றுப் போட்டிகளிற்கு முன்னரே எமது அணி பயிற்சிகளில் ஈடுபடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இது எமது அணியின் வீரர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள உதவியாக அமையும்” என்றார். மேலும் “ஒரு அணியாக பயிற்சியில் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது, அத்தோடு LPL சுற்றுப் போட்டிக்கான திட்டமிடலுக்கும் இந்தப் பாசறை உதவியாக அமையும். எமது அணியை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தயார்படுத்த இந்தப் பயிற்சிப் பாசறை பேருதவியாக அமையும் என்று” Thilina Kandamby தெரிவித்தார்.

Jaffna Stallions அணியின் தலைவரான Thisara Perera “முற்கூட்டிய பயிற்சிப் பாசறை இடம்பெறுவதால் மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் எங்களுக்கு ஒரு அனுகூலத்தை இது தரவல்லது. LPL போட்டிகளில் பங்குபெற்றுவதற்கான தயார்படுத்தலை முற்கூட்டியே ஆரம்பிப்பதால், எங்கள் அணிக்கு உற்சாகம் பிறக்கும், போட்டிகளில் பிற அணிகளோடு ஆக்ரோஷமாக விளையாட இது ஒரு உந்து சக்தியாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று இளம் வீரர்கள் எங்கள் அணியில் இணைவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எல்லா மூத்த வீரர்களும் இந்த இளைய வீரர்களிற்கு உதவி செய்ய ஆவலாக இருக்கிறார்கள்” என்றார்.

பல்லேகல்ல பயிற்சிப் பாசறையின் நிறைவில் Jaffna Stallions அணி, LPL நடக்கும் அம்பாந்தோட்டை நோக்கிப் பயணிப்பார்கள். இந்தப் பயிற்சிப் பாசறையில் பயிற்றுனர் குழாம் முழுமையாக பங்கெடுப்பதானது, அணி வீரர்களின் திறன்களை மதிப்பீடு செய்யவும், அவர்களது திறமைகளை முழுமையாக பயன்படுத்த திட்டமிடவும் ஏதுவாக அமைகிறது.

2020ம் ஆண்டுக்கான LPL போட்டிகள் நவம்பர் 26ம் திகதி தொடங்கி டிசம்பர் 17ம் திகதி வரை நடைபெறும். இலங்கையில் அரங்கேறும் முதலாவது உரிமைத்துவ (Franchise) அணிகளிற்கிடையிலான T20 போட்டிகள் இதுவென்பதால், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரக்கெட் வீரர்களை உள்ளடக்கிய ஐந்து அணிகளைக் கொண்ட இந்தச் சுற்றுப் போட்டியில் மொத்தமாக 23 போட்டிகள் இடம்பெறும். LPLன் முதலாவது வெற்றிக் கிண்ணத்தை தமதாக்க இந்த ஐந்து அணிகளுக்குள்ளும் கடுமையாகப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jaffna Stallions
Jaffna Stallions என்பது இலங்கையில் இடம்பெறும் Lanka Premier League (LPL) போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு உரிமைத்துவ (Franchise) கிரிக்கெட் அணி. Jaffna Stallions அணியின் உரிமையாளர்களாக, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து UK, Canada, Australiaவில் வதியும் 12 கிரிக்கெட் ஆர்வலர்கள் விளங்குகிறார்கள்.

 

Tags :
comments