ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு

  • November 17, 2020
  • 130
  • Aroos Samsudeen
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு

(எஸ்.எம்.அறூஸ்)

நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்பெறவுள்ள லங்கா பிறிமியர் லீக்
(LPL) சுற்றுப் போட்டிகளில் விளையாடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் ஆறு திறமை
வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இணையவுள்ளார்கள்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்:

Shoaib Malik (Pakistan),
Usman Shinwari (Pakistan),
Kyle Abbott (South Africa),
Duanne Olivier (South Africa),
Ravi Bopara (England),
Tom Moores (England)

இந்த ஆறு விளையாட்டு வீரர்களின் கடந்தகால பெறுபேறுகளையும் அவர்களது
திறமைகளையும் கவனமான ஆராய்ந்த Jaffna Stallions அணியினர், அவர்களைத் தமது
அணியில் உள்வாங்கியுள்ளார்கள்.

Shoaib Malik

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான (2007-09) Shoaib Malik ஒரு
சகலதுறை ஆட்ட வீரராவார். வலது கை துடுப்பாட்ட வீரரான Shoaib Malik, வலது கை
off break பந்து வீச்சாளருமாவார். Pakistan Super League (PSL) போட்டிகளில்
Peshawar Zalmi அணிக்கு விளையாடி வருகிறார்.

2007ம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற முதலாவது T20 உலகக் கோப்பையின்
இறுதியாட்டத்திற்கு பாக்கிஸ்தான் அணியை வழிநடத்தியதன் மூலம் Shoaib Malik
சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருந்தார்.

2009ல் இங்கிலாந்தில் இடம்பெற்ற T20 உலகக் கோப்பையை வென்ற பாக்கிஸ்தான்
அணியில் Shoaib Malik முக்கிய பங்காற்றியிருந்தார்.

இதுவரை 116 சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 2,335 ஓட்டங்களைக்
குவித்திருக்கும் Shoaib Malikன் உள்ளடக்கம், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு நிச்சயம் பலம்
சேர்க்கும்.

Ravi Bopara

இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணிக்கு விளையாடிய அனுபவமுள்ள Ravi Bopara,
தற்பொழுது Sussex county அணிக்கு விளையாடி வருகிறார்.

Ravi Bopara, Pakistan Premier League(PPL)இல் Karachi Kings அணிக்காகவும், Indian
Premier League (IPL) போட்டிகளில் Kings XI Punjab அணியை பிரதிநிதித்துவம்
செய்தும், Big Bash League (BBL) போட்டிகளில் Sydney Sixersஐயும், Bangladesh
Premier League (BPL) போட்டிகளில் Chittagong Vikings அணியை பிரதிநிதித்துவம்
செய்தும் சர்வதேச T20 சுற்றுப்போட்டிகளில் ஆடிய அனுபவசாலி ஆவார்.

வலதுகை துடுப்பாட்ட வீரரான Ravi Bopara, துடுப்பாட்ட வரிசையில் எங்கும் ஆடும்
வல்லமையுள்ள ஆட்டக்காரர். அத்துடன் அவரது மிதவேக துல்லியமான பந்து வீச்சும்
அவரை ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ வைத்துள்ளது. ஜப்னா ஸ்டாலியன்ஸ்
அணியில் Ravi Bopara முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kyle Abbott

தென்னாபிரிக்க சர்வதேச கிரிக்கெட் அணிக்கு ஆடிய Kyle Abbott ஒரு வேகப் பந்து
வீச்சாளர். 2019ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டங்களில்
தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக Kyle Abbott திகழ்ந்தார்.

தென்னாபிரிக்க உள்ளூர் சுற்றுத்தொடரில் KwaZulu-Natal அணிக்காகவும், IPL
போட்டிகளில் Chennai Super Kings மற்றும் Kings XI Punjab அணிகளுக்காகவும், PPL
போட்டிகளில் Lahore Qalandars அணிக்கும் ஆடி சர்வதேச T20 சுற்றுப்போட்டிகளில்
அனுபவசாலியாகத் திகழ்கிறார், Kyle Abbott.

Kyle Abbott அனுபவமிக்க வேகப் பந்து வீச்சு, LPL போட்டிகளில் ஆடும் பிற
அணிகளிற்கு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Usman Shinwari

பாக்கிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான Usman
Shinwari, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஓருவராக
கருதப்படுகிறார்.

Duanne Olivier

தென்னாபிரிக்க தேசிய கிரிக்கெட் அணிக்கு ஆடிய அனுபவமுள்ள வலதுகை வேகப்
பந்துவீச்சாளரான Duanne Oliver, Jaffna Stallions அணியின் பந்து வீச்சு வலிமைக்கு
பேலும் பலம் சேர்க்கும் இன்னுமொரு சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார்.

Tom Moores

இங்கிலாந்து தேசிய U19 அணி, Lancashire, PPL போட்டிகளில் Multan Sultan
அணிகளிற்கு ஆடிய அனுபவமுள்ள இளைய இடதுகை துடுப்பாட்டக்காரரும் விக்கெட்
காப்பாளருமான Tom Moores, Jaffna Stallions அணியின் பிரதான விக்கெட்
காப்பாளராக விளங்குவார்.

Jaffna Stallions

ஜப்னா ஸ்டாலியன்ஸ் என்பது இலங்கையில் இடம்பெறும் Lanka Premier League (LPL)
போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு உரிமைத்துவ (Franchise) கிரிக்கெட் அணி. ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்களாக, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்து,கனடா, அவுஸ்திரேலியாவில் வதியும் 12 கிரிக்கெட் ஆர்வலர்கள் விளங்குகிறார்கள்.

Tags :
comments