2021 Budget – முக்கிய யோசனைகள் ஒரே பார்வையில்….

  • November 17, 2020
  • 51
  • Aroos Samsudeen
2021 Budget – முக்கிய யோசனைகள் ஒரே பார்வையில்….

ஒரே பார்வையில் 2021 வரவு செலவுத்திட்டம்….

1. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம்.

2. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சாதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துதல்.

3. ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக நீடிப்பு.

4. மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு முற்றாக தடை.

5. தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் வரை அதிகரிப்பு.

6. மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி.

7. சமூக பாதுகாப்புக்காக ரூபா 2,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு.

8. சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையை பாதுகாத்தல், நாட்டின் மீன் வளத்தை பாதுகாப்பதற்காக கடற்படையை வலுவூட்டுதல், இராணுவம் மற்றும் விமான படைக்கு வசதிகளை செய்வதற்காக 20,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

9. கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம்.

10. முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையணி சேர்ந்த ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவர்களுக்காகவும் நிவாரண வேலைத்திட்டங்கள் 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

11. 2021 – 2022 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தொலைத்தொடர்பு அபிவிருத்தி நிதியத்தியிலருந்து 15 மில்லியன் ரூபா முதலீடு.

12. கொவிட்-19 வைரஸ் தாக்கம் உட்பட தொற்று நோய்களினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு புதிய காப்புறுதி திட்டம் தற்போது கொரோனாவின் இரண்டாவது மூன்றாவது அலை – பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள்.

13. கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோரின் போஷாக்கை மேம்படுத்தும் திரிபோஷா உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேலதிகமாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

14. மாணவர்களுக்கு தொலைக்காட்சியின் ஊடாக கற்பிப்பதற்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி.

15. நெற்செய்கைக்காக உரத்தை இலவசமாக வழங்கவும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உரத்தை வழங்கவும் திட்டம்.

16. பால் மா இறக்மதிக்கு பதிலாக உள்நாட்டு பால்மாவை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை.

17. வாகனங்களை புதுப்பிப்பதற்காகவும் அவற்றை பொருத்துவதற்காகவும் தேவையான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்காக வரிச்சலுகை.

18. வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு இரண்டு வருட விடுமுறை.

19. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒன்றை பயன்பாட்டு பொலித்தீன்இ பிளாஸ்டிக் பாவனைக்கு தடை.

20. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை கண்காணிப்பதற்கென வலுவான கட்டமைப்பை கொண்ட புதிய சட்டங்கள்.

21. குருணாகல், தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹரயில் இருந்து தம்புள்ளை வரையிலான பகுதி விரைவைில் அமைக்கப்படவுள்ளது.

22. உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான இறக்குமதி மாற்றீடுகளின் ஊடாக வெ ளிநாட்டுச் செலாவணியினை சேமிக்கின்றதுமான சீரானதும் நீண்டகால வருமானத்தையும் ஈட்டுகின்ற வர்த்தகக் கொள்கையொன்றினை வகுத்தல்.

23. வணிகச் சட்டம், சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பாக 10 நிபுணத்துவ ஆலோசகர் அணிகளிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்புகளுடன் 60 சட்டங்களை திருத்துவதற்கான சட்டமூலங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள்.

Tags :
comments