கொரோனா உடல்களை அடக்கம் செய்தால், அது அரசாங்கத்தின் அடக்கமாக அமைந்து விடும் – அபயதிஸ்ஸ தேரர்

  • November 17, 2020
  • 75
  • Aroos Samsudeen
கொரோனா உடல்களை அடக்கம் செய்தால், அது அரசாங்கத்தின் அடக்கமாக அமைந்து விடும் – அபயதிஸ்ஸ தேரர்
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் சம்பந்தமாக அரசியல் ரீதியாக சிந்தித்து, அவற்றை அடக்கம் செய்ய தீர்மானித்தால், அரசாங்கத்தை அடக்கம் செய்வதற்காக எடுத்த தீர்மானமாக அமைந்து விடும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இப்படி அரசாங்கம் தன்னை தானே அடக்கம் செய்துக்கொள்ள தீர்மானித்தால் தன்னால் எதனையும் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தொழிட்ப குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தமது அரசியல் காரணங்களுக்காக ஆட்சியாளர்கள் மாற்றக் கூடாது எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு கொண்டு வர முக்கிய பங்காற்றிய பௌத்த பிக்குகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
comments