187 ஆண்டுகால போராட்டம் – ஏதன்ஸ் பள்ளிவாசல் திறக்கப்பட்டது

  • November 18, 2020
  • 175
  • Aroos Samsudeen
187 ஆண்டுகால போராட்டம் – ஏதன்ஸ் பள்ளிவாசல் திறக்கப்பட்டது

கிரேக்க தலைநகர் ஏதன்ஸில் செயல்பட்டுக்கொண்டிருந்த பள்ளிவாசல்கள் கிபி.1833 உதுமானிய பேரரசின் ஓய்விற்குப்பின் கிரீஸ் நாட்டில் முற்றிலுமாக மூடப்பட்டன. அங்கே கணிசமான இஸ்லாமியர்கள் இருந்துவந்த நிலையில் கிபி.1890ல் மீண்டும் ஏதன்ஸில் பள்ளிவாசல்கள் திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் தலைதூக்கியிருந்த போதும், கிரேக்கத்தின் கிறுஸ்தவ சக்திகளாலும், அரசியல் காரணிகளாலும் அது கிட்டத்தட்ட 100 வருடங்களாக அழைக்கழிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2006ல் அரசு சார்பாகவே பள்ளிவாசல் கட்டித்தர கிரேக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் அதற்கான நிதி ஒதுக்கித்தரப்படவில்லை. பிறகு 2010 ம் ஆண்டு மீண்டும் இதற்கான கோரிக்கைகள் மேலெழும்பவே கிரீஸின் சுமார் 2லட்சம் இஸ்லாமியர்களின் வசதிக்காக பள்ளிவாசல் கட்டியே ஆகவேண்டும் என அரசியல் கட்சிகள் தரப்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது, இதுநாள் வரை அங்குள்ள இஸ்லாமியர்கள் பங்கர்களிலும், பார்க்கிங்களிலுமாக தொழுது வந்தனர்.

கொரனா லாக்டவுன் தொடங்குவதற்கு முன் பள்ளிவாசல்கள் சில திறக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டுவந்த  சிலநாட்கள் மட்டுமே திறந்திருந்த நிலையில்  கொரனா காலத்தில் மீண்டும் பூட்டப்பட்டன. முழுக்க அரசின் செலவில் கட்டிதரப்பட்ட ஐரோப்பாவின் முதல் பள்ளிவாசலாக ஏதன்ஸ் பள்ளிவாசல் அறியப்படுகிறது.

இப்போது எல்லாம் முடிந்து, கடந்த வெள்ளி முதல் ஏதன்ஸில் பள்ளிவாசல் செயல்படலாம் என அனுமதி கிடைத்துள்ளது. 350 பேர் தொழக்கூடிய ஒரு பள்ளிவாசலில் சமூக இடைவெளி காரணமாக வெறும் 13 பேர் மட்டுமே தொழ அனுமதிக்கப்பட்டனர் என்பது வேதனை.

S. Rosy

Tags :
comments