ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரா்கள் இலங்கைக்கு 19ம் திகதி வருகின்றனர்.

  • November 18, 2020
  • 80
  • Aroos Samsudeen
ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரா்கள் இலங்கைக்கு 19ம் திகதி வருகின்றனர்.

(எஸ்.எம்.அறூஸ்)

நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்பெறவுள்ள லங்கா பிறிமியர் லீக்
(LPL) சுற்றுப் போட்டிகளில் விளையாடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் ஆறு திறமை வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

இவர்களில் ஐந்து வீரா்கள் எதிர்வரும் 19ம் திகதியும், சுகைப் மலீக் மாத்திரம் 20ம் திகதியும் இலங்கையை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

, உஸ்மான் ஷின்வாரி (பாகிஸ்தான்), கைல் அபோட் (தென்னாப்பிரிக்கா), டுவான் ஒலிவர் (தென்னாப்பிரிக்கா), ரவி போபரா (இங்கிலாந்து)

டாம் மூர்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் 19ம் திகதி இலங்கையை வந்தடைகின்றனர்.
சுகைப் மலீக் மாத்திரம் ஒருநாள் பிந்தியே 20ம் திகதி இலங்கைக்கு வருகின்றார்.

லங்கா பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் 14 உள்நாட்டு வீரா்களும், 6 சர்வதேச வீரா்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் என்பது இலங்கையில் இடம்பெறும் லங்கா பிறிமியர் லீக் (LPL) போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு உரிமைத்துவ (Franchise) கிரிக்கெட் அணியாகும்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்களாக, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்து,கனடா, அவுஸ்திரேலியாவில் வதியும் 12 கிரிக்கெட் ஆர்வலர்கள் விளங்குகிறார்கள்.

Tags :
comments