அட்டாளைச்சேனையில் தொழில் நியமனங்கள் வழங்கிவைப்பு

  • November 19, 2020
  • 296
  • Aroos Samsudeen
அட்டாளைச்சேனையில் தொழில் நியமனங்கள் வழங்கிவைப்பு

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மத்திய குழுவின் சிபார்சுக்கமைவாக கிடைக்கப்பெற்ற 10 பேருக்கான நியமனக் கடிதங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

பொதுஜன பெரமுன கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் மற்றும் மத்திய குழுவின் செயலாளர் அன்ஸார் றஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags :
comments